Load Image
dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்: தமிழ் வாழ்க போர்டை குப்பையில் வீசுங்க!

Tamil News
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:எஸ்.மன்னர்மலைமணி, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு தேர்வை, 9.12 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களில், 5.16 சதவீத மாணவர்கள், அதாவது, 47 ஆயிரம் பேர் தமிழில் தோல்வி அடைந்து உள்ளனர் என்ற செய்தியை படிக்கும் போது, தாய் மொழி மீது பற்றுக் கொண்ட அனைவரின் நெஞ்சமும் குமுறுகிறது.

'தமிழ் செம்மொழி... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்...' என்று முழங்கும் திராவிட மாடல் அரசு, ஓராண்டில் 100 சாதனையை நிகழ்த்தி விட்டதாக பெருமை அடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், 47 ஆயிரம் மாணவர்கள் தாய்மொழியான தமிழில் தோல்வி அடைந்திருப்பது, பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் மாற்றமில்லை. 'தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

'மருத்துவ கல்வியை தாய்மொழியிலேயே படிக்கலாம்' என, பிரதமர் மோடியும் கூறியுள்ளார். ஆனால், அந்தக் கல்விக் கொள்கையை ஏற்காமலும், பிரதமர் மோடியின் யோசனையை புறக்கணித்தும், தமிழகத்திற்கு என, புதிய கொள்கையை உருவாக்க குழுவை நியமித்துள்ளது ஸ்டாலின் அரசு. இதிலிருந்தே, எந்த மொழியையும், தமிழக மாணவர்கள் உருப்படியாக கற்றுக் கொள்ள, தி.மு.க., அரசு அனுமதிக்காது என்றே தெரிகிறது.Latest Tamil News
'தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்போர், தமிழ் மொழி தேர்வில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால் தான், மற்ற தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தப்படும்' என்று கூறப்பட்டுள்ளது. இந்த லட்சணத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி, பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாட்டையும், அதிலும், தொடக்கக்கல்வி துறையின் செயல்பாட்டையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

தமிழகத்தில் இரு மொழி கொள்கையே நீடிக்கும்; மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்று கூறி வரும் திராவிட செம்மல்கள், தாய் மொழியையே மாணவர்கள் மோசமாக கற்கும் பரிதாப நிலைமை நீடிக்க அனுமதித்தால், மாநிலத்தின் கல்வித்தரம் மிக மோசமாகும். ஆங்கிலத்தை கண்டு, அரசு பள்ளி மாணவர்கள் பயப்படுவது போல, இனி தமிழை கண்டும் அஞ்சும் சூழ்நிலை உருவாகும்.

தமிழக மாணவர்கள் அனைவரும், தமிழில் தோல்வி அடையவே மாட்டார்கள்; அந்த அளவுக்கு அவர்களுக்கு தமிழ் முறையாக போதிக்கப்படும்; தமிழாசிரியர்கள் பற்றாக்குறையே பள்ளிகளில் இருக்காது என்ற நிலையை, தி.மு.க., அரசு உருவாக்க வேண்டும். இல்லையெனில், அரசு அலுவலகங்களில் தொங்கும், 'தமிழ் வாழ்க' என்ற போர்டை குப்பைத் தொட்டியில் வீசுங்க!
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (76)

 • Amal Anandan - chennai,இந்தியா

  அப்போ 8 லட்சம் தேர்வாகாத ஹிந்தியை எங்கே கொண்டு போடுவது?

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  மற்ற மாநிலங்கள் இத்தனை சத்தம் போடுவதில்லை, எனவே அவர்கள் மொழிகள் செத்துவிட்டனவா? சத்தம் போடாமல் நாம் நம் மொழியை கற்பிக்க வேண்டும், அதில் உள்ள ஆழ்ந்த பண்டைய இலக்கியங்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். சும்மா பேச, எழுத கற்றுக்கொண்டு, பண்டைய இலக்கியங்களை கற்காவிட்டால், தமிழ் காப்போம் என்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

 • Pandi Muni - Johur,மலேஷியா

  முரசொலி படிக்கிற வெங்காய தோலா இருப்பானுங்களோ.

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  இன்று ஒரு செய்தி படித்தேன். சிலர் சிதம்பரம் நடராஜர் சன்னதியில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தேவாரம், திருமுறை ஓத அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வழி முறை காலம் காலமாக உண்டு. உதாரணமாக ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள் பிராகாரத்தில் திவ்ய பிரபந்தம் பாட அரையர் சுவாமிகள் மட்டும் தான் அனுமதி.. அதே போல் கொடிக் கம்பம் வரை தான் வேத பாராயணம். அதற்கு மேல் துவாரபாலகர்கள் மட்டும் அரையர்கள் மட்டும் தான் பிரபந்தம் சொல்ல முடியும். உற்சவ நாட்களில் ஏகாந்த சேவை போது மட்டும் வீணை வாசிக்க முடியும். மற்ற நாளில் நாதஸ்வர இசை மட்டும் தான். சேவார்த்திகள் குழுவாக பிரபந்த பாடல்கள்.பாடக்கூடாது. இது வரை யாரும் மீறியது கிடையாது. யாரும் கேட்டது கிடையாது..ஆயிரக் கணக்கான வருடங்களாக இப்படி நடை பெறுகிறது. இது போல நடைமுறையில் இருக்கும் வழக்கங்களை மாற்ற அரசுக்கோ,.நீதி மன்றத்திற்கோ அறநிலையத் துறைக்கோ அதிகாரம்.கிடையாது. ஆனால் இந்த ஹிந்து விரோத அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்.

 • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

  இதில், மாணாக்கர்களின் கற்கும் திறன், ஆசிரியர்களின் போதிக்கும் திறன் அடங்கும். விஞ்ஞான கணித பாடங்களை படித்து அதிக மதிப்பெண் பெறமுடியும், அவ்வாறு பெற்றால்தான் (cut off) engineer, doctor போன்ற மேல்படிப்புகளை படிக்க இயலும் என்று சொல்லி சொல்லியே மொழி பாடங்களில் கோட்டை விடுகிறார்கள். மேலும் மொழி பாடங்களின் நேரங்களை இதர சப்ஜெக்ட் ஆசிரியர்கள் பயன்படுத்தும் அவலங்களும் இருக்கலாம் (பள்ளியின் பெருமைக்காகவும், அடுத்து வரும் கல்வி ஆண்டில் engineer, maruthuvar போன்ற பிரிவில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை காட்டி வியாபாரம் செய்யவும்). தமிழ் படித்தாலும், தமிழ் மொழியில் படித்தாலும் சிறப்பான எதிகாலம் உண்டு என்ற தன்னம்பிக்கையை மாணவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும்.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்