Load Image
dinamalar telegram
Advertisement

புதுக்குளம் மின்மயானத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை,-மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.,பஸ் ஸ்டாண்ட் எதிரே புதுக்குளத்தில் மின்மயானம் அமைக்க தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை கற்பகநகர் நகரத்தார் சங்கம் தலைவர் சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனு:புதுக்குளத்தில் மின் மயானம் அமைக்க பூமி பூஜை நடந்துள்ளது. குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள இடத்தை மயானம், புதைகுழியாக பயன்படுத்தக்கூடாது; எவ்வித கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த இடம் நீர்நிலையாக இருந்தது. அருகில் கற்பக நகர், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, உயர்நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் அரசுத்துறைகளின் அலுவலகங்கள் உள்ளன.மின்மயானம் அமைத்தால் சுற்றுச்சூழல் மாசுபடும். நோய்கள் உருவாகும். மின்மயானம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: அந்த இடம் ஏற்கனவே 45 ஆண்டுகளாக மயானமாக உள்ளது. அதில்தான் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிதி உதவியில் மின்மயானம் அமைக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. இதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள் உள்ளன. கீழமை நீதிமன்றம் 'எக்ஸ்பார்ட்டி'யாக உத்தரவிட்டுள்ளது. மின்மயானம் அமைக்க சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தெரிவித்தது.நீதிபதிகள்: மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இத்தகைய திட்டங்களை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த இடம் முன்பு நீர்நிலையாக இருந்தது. தற்போது வறண்ட நிலமாக மாறிவிட்டது. மின்மயான திட்டப் பணியை நிறுத்த உத்தரவிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement