Load Image
dinamalar telegram
Advertisement

காதல் தம்பதி போலீசில் தஞ்சம்; உறவினர்கள் மத்தியில் மோதல்

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர் : காதல் திருமணம் செய்த ஜோடி, போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தனர். விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட உறவினர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டதால் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது.


கேரளத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் திருப்பூர் புதுக்காடு பகுதியில் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஒருவரும் அந்நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.இருவரிடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.


நேற்று காலை இருவரும் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு வந்தனர். போலீசார் இரு தரப்பு குடும்பத்தாரையும் அழைத்து சமாதானம் செய்ய முயற்சி எடுத்தனர்.இதற்காக இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷன் வந்தனர். புதுமணத் தம்பதி இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய முடியாது; அவர்களை யாரும் எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.


இதையடுத்து வெளியே வந்த இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. அங்கிருந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது.
Telegram Banner
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

Advertisement