ரயில்வே சிறப்புபாதுகாப்பு குழு ஆய்வு
மதுரை,-மதுரை ரயில்வே நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மண்டல அளவிலான சீனியர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ரயில்வே தலைமை முதன்மை பாதுகாப்பு அதிகாரி சித்தார்த்தா தலைமையில் முதன்மை மின்சார பொறியாளர் அணில் பாஞ்சியார், முதன்மை சமிக்ஞை பொறியாளர் சுனில், முதன்மைப் பொறியாளர் மஸ்தான் ராவ், முதன்மை ரயில் பெட்டி பொறியாளர் பிரபாஸ் நாக், துணை முதன்மை ரயில் இயக்க மேலாளர் பரத் குமார் ஆகியோர் ரயில் நிலையம், ரயில்பாதை அமைப்பு, நிலைய அதிகாரி கேபின், ரயில் இன்ஜின் பைலட்டுகளுக்கான ஓய்வறை, ரயில் பெட்டி பராமரிப்பு, விபத்து மறுசீரமைப்பு ரயில் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.மதுரை-கொடைக்கானல்ரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதையையும் இக்குழு ஆய்வு செய்தது. இன்று (ஜூன் 24) இக்குழு பழநி - திண்டுக்கல் இடையே ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்யவுள்ளது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!