மதுரை, திருச்சி மண்டல பணித்திறனாய்வு கூட்டம்
மதுரை-மதுரையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித்திறனாய்வுக் கூட்டம் நடந்தது. இத்துறையின் கமிஷனர் அதுல் ஆனந்த், எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மதுரை, திருச்சி மண்டல அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.இரு மண்டலங்களிலும் பணியாளர், வேலையாள் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் முடிவுற்று ரூ.3 கோடியே 22லட்சத்து 42 ஆயிரத்து 102 அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் 25 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.22 லட்சத்து 28 ஆயிரத்து 969 விதிக்கப்பட்டது. சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் ரூ.23 ஆயிரத்து 760 விதிக்கப்பட்டுள்ளது.1566 நிறுவனங்களில் ஆய்வு செய்து 344 நிறுவனங்களில் முரண்பாடுகள் இருந்ததால் இசைவுத்தீர்வு கட்டணம் ரூ.70 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது.இதுபோல மோட்டார் வாகன சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம், எடையளவு சட்டம் ஆகியவற்றின் கீழ் பல நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடத்தினர். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து, நலத்திட்டங்களை வழங்காமல் நிலுவையில் உள்ளவற்றை உடனே வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!