தரைமட்ட பாலத்தை உயர்த்தி அமைக்கணும்!
வால்பாறை : வால்பாறை ரொட்டிக்கடை பகுதியிலுள்ள, குறுகலான தரைமட்டப் பாலத்தை உயர்த்தியமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், பல்வேறு இடங்களில் தரைமட்டப் பாலங்கள் உயர்த்தி அமைக்கப்படாமல் உள்ளன. சுற்றுலா பகுதியான வால்பாறைக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், குறுகலான பாலங்களில் வாகனங்கள் செல்லும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இதில், பொள்ளாச்சி ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ரொட்டிக்கடை தரைமட்டப் பாலத்துக்கு முக்கித்துவம் கொடுத்து உயர்த்தி அமைக்க வேண்டும்.இதேபோன்று, பொள்ளாச்சி ரோட்டிலுள்ள அனைத்து தரைமட்டப் பாலங்களையும் உயர்த்தி அமைக்க வேண்டும். குறுகலாக உள்ள பாலங்களை விரிவுபடுத்த வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!