வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை
வால்பாறை : வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளில், 9,538 வீடுகள் உள்ளன. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், சொத்துவரி, காலிமனைவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி செலுத்தாமல் உள்ளனர்.நகராட்சி கமிஷனர் பாலு அறிக்கையில், 'நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவைத்தொகையை, நகராட்சி கணினி மையத்தில் உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என, தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!