வெள்ளாளர், முதலியார் ழில் கண்காட்சி
மதுரை,-- மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வெள்ளாளர்,முதலியார் தொழில் வர்த்தக சங்கத்தின் தொழில் கண்காட்சி ஜூன் 25, 26ல் நடக்கிறது. நாளை (ஜூன் 25) காலை 10:00 மணிக்கு மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கண்காட்சியை துவக்குகிறார். ஆட்டோமொபைல், பர்னிச்சர், கட்டுமான, உணவு, கல்வி, டிராவல்ஸ் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன.இளம் தொழில்முனைவோருக்கு ஊக்குவிப்பு, அரசு மானிய உதவி, பிரான்சைஸ் வாய்ப்பு குறித்து ஆலோசனை பெறலாம் என தொழில் வர்த்தக சங்கத் தலைவர் இளங்கோவன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் முத்துக்குமார், கண்காட்சி தலைவர் பொன் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் ராமசாமி தெரிவித்தனர். அனுமதி இலவசம்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!