அமைச்சர் உறுதி: கைவிடப்பட்டது போராட்டம்
வால்பாறை : வனத்துறையை கண்டித்து ஆழியாறில் இன்று (24ம் தேதி) நடக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரிடம் வனத்துறை நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மேல் சுற்றுலா பயணியர் வால்பாறைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், கோவை மாவட்ட மக்கள் வால்பாறை செல்லவும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வனத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, தங்கும்விடுதி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள், ஆழியாறு சோதனை சாவடியில் இன்று (24ம் தேதி) போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், போராட்டுக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் சவுந்திரபாண்டியன், பாபுஜி, பிரதீப் ஆகியோர், சென்னையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரனை நேற்று நேரில் சந்தித்து பேசினர்.தங்கும் விடுதி உரிமையாளர் சங்க செயலாளர் ஷாஜூ கூறுகையில், ''ஆழியாறு சோதனைச்சாவடியில், மாலை, 6:00 மணிக்கு மேல் சுற்றுலா பயணியர் வால்பாறைக்கு செல்லவும், நுழைவுக்கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக வனத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து, இன்று (24ம் தேதி) நடக்கவிருந்த போராட்டம் கைவிடப்படுகிறது,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!