அரசு பள்ளி மாணவருக்கு திருக்குறளுடன் துணிப்பை
பல்லடம் : நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பல்லடம் அறம் அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், மற்றும் துணிப்பை ஆகியவை வழங்கப்பட்டன.முன்னதாக, மாணவர்களுக்கு நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.அறம் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!