சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மாணவர்கள் சைக்கிள் பேரணி
பொள்ளாச்சி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மகாலிங்கம் கல்லுாரி மாணவர்களின் சைக்கிள் பேரணி நடந்தது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியின் சுற்றுச்சூழல் கிளப் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, ஜோதிநகர் ருக்குமணி அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் முன் துவங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சியாமளா, பேரணியை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ரத்தினவேலு தலைமை வகித்தார். கட்டடவியல் துறை தலைவர் முரளி, திட்ட அலுவலர் நாகராஜன், துறை தலைவர் சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமையாசிரியர் லோகநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் சார்பில், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உதவி செய்யப்பட்டது. பள்ளி முன் துவங்கிய பேரணி, ஜோதிநகர், மின்நகர் மற்றும் மாக்கினாம்பட்டி வழியாக மூன்று கி.மீ.,க்கு நடைபெற்றது.மாக்கினாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பேரணி நிறைவடைந்தது. ஊராட்சி தலைவர் மாரியம்மாள், துணை தலைவர் அழகிரிராஜ் பங்கேற்று, மரக்கன்றுகளை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை, சுற்றுச்சூழல் கிளப் ஒருங்கிணைப்பாளர் பர்வீன் செய்திருந்தார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!