Load Image
dinamalar telegram
Advertisement

மதிப்பெண்களை அள்ளிய சென்சுரி பள்ளி மாணவர்கள்

திருப்பூர் : திருப்பூர், சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.


தேர்வெழுதிய, 117 மாணவர்களில், 106 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 மாணவி தேஜஸ்வினி - 593 மதிப்பெண் பெற்று முதலிடம், இவர் உயிரியல், இயற்பியல் பாடங்களில் சென்டம் எடுத்துள்ளார். மாணவி கே.பிரகல்யா - 592 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம். குருதரன் - 591 மூன்றாமிடம், நான்காமிடத்தில், ஸ்ருதி - 584, ஐந்தாமிடத்தில் டி. பிரகல்யா - 583 மதிப்பெண்களுடன் உள்ளனர்.


இயற்பியலில் இருவரும், உயிரியலில் ஒரு மாணவியும், கணக்கு பதிவியலில் - 2, வணிகவியலில் - 4, பொருளியலில் - 3, கணினி அறிவியலில் - 3, கணிப்பொறி பயன்பாடுகளில் - 4, வணிக கணிதத்தில், புள்ளியியலில் - 2 பேர் சென்டம் அடித்துள்ளனர்.பத்தாம் வகுப்பில், 97 மாணவ, மாணவியர்கள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி சாய்கரிஷ்மா கணிதம், அறிவியல் பாடத்தில் சென்டம் எடுத்து அசத்தியுள்ளார். தீபிகா கணிதத்தில் சென்டம் அடித்து அசத்தினார்.சாதித்த மாணவர்களை, பள்ளி தாளாளர் சக்திதேவி, பள்ளி முதல்வர் ஹெப்சிபா பால், பள்ளி துணைமுதல்வர் ஆக்ஸீலியா மைக்கேல் பாராட்டினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement