32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்!
மேட்டுப்பாளையம் : காரமடை நகரில், குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க, 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.காரமடை நகரில் வழிப்பறி கொள்ளை, வீடுகளில் திருட்டு, வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
வாகனங்கள் திருடிச் சென்ற, ஐந்து நபர்களை, கண்காணிப்பு கேமரா வாயிலாக, போலீசார் கடந்த வாரம், கைது செய்தனர். இதனால் நகரின் முக்கிய இடங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க, போலீசார் முடிவு செய்தனர்.காரமடை நகரில் காந்தி மைதானம், கார் ஸ்டாண்டு, பில்லு கடை முக்கு, கன்னார்பாளையம் பிரிவு, தேர் செல்லும் வீதிகள் உள்ளிட்ட, 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு, 24 மணி நேரம் கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கூறுகையில், "கட்டுப்பாட்டு அறை ஸ்டேஷனில் அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடிகிறது. இந்த இடங்களில் ஏதேனும் தவறுகள் நடந்தால், உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல வசதியாக இருக்கும். இதனால் திருட்டு, வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுவது தடுக்கப்படும்," என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!