அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
உடுமலை : பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கான 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' பயிற்சி வகுப்பு நடந்தது.
குடிமங்கலம் ஒன்றியம், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வித்துறை சார்பில், 4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கான, ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் கருத்தாளர்களாக, ஆசிரியர்கள் வசந்தி, மகாலிங்கம், சசிகலா செயல்பட்டனர். காணொலி வாயிலாகவும், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில், 57 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித்திட்ட அலுவலர் அண்ணாதுரை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் தர்மபிரபு, விஜயலட்சுமி பயிற்சியை பார்வையிட்டு, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.குடிமங்கலம் வட்டார வள மைய, ஆசிரியர் பயிற்றுனர் நித்யா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!