வனவிலங்குகளை காப்பாற்ற ஏழு இடங்களில் வேகத்தடை
மேட்டுப்பாளையம் : வாகனங்களில் வனவிலங்குகள் அடிபடுவதை தவிர்க்க, கோத்தகிரி ரோட்டில் ஏழு இடங்களில், வேகத்தடை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேட்டுப்பாளையம் -- கோத்தகிரி ரோட்டில் மலைப்பகுதி துவங்கும் இடத்தில் வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் யானைகள், காட்டு மாடுகள், மான்கள், சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள், இரை தேடவும், தண்ணீர் குடிக்கவும் ரோட்டை கடந்து செல்கின்றன.வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து, மலைப்பாதை தொடங்கும்வரை, இரண்டு மீட்டருக்கு ரோடு சமதளத்தில் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் வாகனங்கள் அதிவிரைவாக செல்கிறது.அந்த வேளையில், ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகின்றன. இதில் வனவிலங்குகள் காயம் அடைவதோடு, வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே, இந்த ரோட்டில் வாகனங்களில் செல்பவர்கள் மெதுவாக செல்ல வேண்டும் என, வனத்துறையினர் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், கோத்தகிரி ரோட்டில், வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து, மலைப்பாதை துவங்கும் வரை, ஏழு இடங்களில் வேகத்தடை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!