Load Image
dinamalar telegram
Advertisement

குழாய் இருந்தாலும் குடிநீரில்லை: குப்பை எடுத்தாலும் சுகாதாரமில்லை

திருமங்கலம்,-திருமங்கலம் உரப்பனுார் ஊராட்சியில் மேல உரப்பனூர், கீழ உரப்பனூர், இந்திரா காலனி, ஊராண்ட உரப்பனூர், ஜே.ஆலங்குளம், பள்ளக்காபட்டி கிராமங்கள் உள்ளன.


இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.மத்திய அரசின் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் இந்திரா காலனியில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையிலும் இதுவரை முழுமையாக தண்ணீர் வினியோகம் இல்லை.


சமீபத்தில் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய் தரமின்றி இருப்பதால் அனைத்தும்பெயர்ந்து விட்டன. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ளது.பொது சுகாதார வளாகம் பாழடைந்ததால் சமீபத்தில் இடிக்கப்பட்டது. இதுவரை மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. குப்பைத் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்படுத்த முடியாத நிலையில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளது. மேல உரப்பனூரில் முழுமையான சாக்கடை வசதி இல்லாததால் ரோடுகளில் தண்ணீர் செல்கிறது.இப்பகுதியைச் சேர்ந்த மதுக்குமார் கூறியதாவது: இந்திரா காலனியில் குடிநீர் குழாய் அமைத்ததுமுதல் இதுவரை தண்ணீர் வினியோகம் செய்யவில்லை.

குடிநீரை தினமும் விலை கொடுத்து வாங்குகிறோம். சமீபத்தில் கட்டிய சாக்கடை கால்வாயும் தரம் இன்றி இருப்பதால் இடிந்து விழுந்து பயனற்று போனது.அய்யனார் கூறியதாவது: வீடுகள் தோறும் குப்பையை பெற்றுச் சென்று ரோட்டோரம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது, என்றார்.ஊராட்சி மன்ற தலைவர் யசோதை கூறியதாவது: ஒவ்வொரு கிராமத்திலும் 4க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டி கட்டுவதற்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.மேல உரப்பனூரில் தெருக்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதால் சாக்கடை கால்வாய் கட்ட வழியில்லை. இங்கு ஆக்கிரமிப்புகளை அளக்க சென்றவர்கள் மீது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போதிய ஆவணங்களை எடுத்து வரவில்லை எனக்கூறி தாலுகா அலுவலகஊழியர்கள் திரும்பி விட்டனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முறையான சாக்கடை வசதி ஏற்படுத்த முடியும்.குப்பையை ரோட்டில் கொட்டாமல், தரம் பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement