Load Image
dinamalar telegram
Advertisement

நலவாரிய சிறப்புமுகாம்

அன்னுார் : நலவாரியத்தில் உறுப்பினராக சேர இன்று முகாம் நடக்கிறது.அன்னுார் தாசில்தார் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் வட்டாரத்தில் உள்ள பேரூராட்சி மற்றும் 21 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மத்திய அரசின் தேசிய அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர தாச பளஞ்சிக சேவா சங்க மண்டபத்தில் இன்று காலை 10:00 மணிக்கு முகாம் துவங்குகிறது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயக் கூலி மற்றும் சிறு, குறு விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம். முகாமிற்கு வருபவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி புத்தகம், போட்டோ, ஆகியவற்றுடன் வர வேண்டும்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement