மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வினியோகம்
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், இலவசமாக நோட்டுகளை வழங்கினார்.
சிறுமுகை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தி.மு.க., அரசின் ஓராண்டை அடுத்து, செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், இப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படிக்கும், 120 மாணவர்களுக்கும், பிளஸ்2 படிக்கும், 130 பேருக்கும் என மொத்தம், 250 மாணவர்களுக்கு, இலவசமாக நோட்டுகளை வழங்கினார்.மேலும் இப்பள்ளியில், 10, பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வில், முதல் மூன்று மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முறையே, 2000, 1,500, 1000 ரூபாய் ஊக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!