Load Image
dinamalar telegram
Advertisement

வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம்



சோழவந்தான்,--சோழவந்தான் வைகை ஆற்றில் நடந்த வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்தில் எழுந்தருளிய ஜெனகை மாரியம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.இக்கோயில் வைகாசி திருவிழா ஜூன் 6ல் கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் கோயில் கம்பத்தில் கொடி இறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. புஷ்ப அலங்காரத்தில் அம்மன் பொன்னுாஞ்சலில் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி இளமதி, உபயதாரர் பால்பாண்டியன் குடும்பத்தார் செய்திருந்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement