Load Image
Advertisement

-சொன்னீங்களே, செஞ்சீங்களா; மக்கள் கேள்வி எழுப்புவதாக கவுன்சிலர்கள் கொதிப்பு

 -சொன்னீங்களே, செஞ்சீங்களா;  மக்கள் கேள்வி எழுப்புவதாக கவுன்சிலர்கள் கொதிப்பு
ADVERTISEMENT
மதுரை: 'மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு முன் இதை செய்வேன், அதை செய்வேன் என சொன்னீங்களே அதை செஞ்சீங்களா' என, மக்கள் கேள்வி எழுப்புவதாகவும், பொறுப்புக்கு வந்து 5 மாதங்களாகியும் நிதி ஒதுக்காததால் வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை என்றும் மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கொதித்தனர்.


மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் கூட்டம் துவங்கியது. முன்னாள் கமிஷனர் கார்த்திகேயனுக்கு நன்றியும், இன்னாள் கமிஷனருக்கு வரவேற்பும் தெரிவிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., பூமிநாதன் வார்டு குறைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.


மண்டலம் 1 (கிழக்கு) தலைவர் வாசுகி: தெரு விளக்குகள் சரிவர எரியவில்லை. அவற்றை சீரமைக்க, பழுதுநீக்க ரூ.5 லட்சம் ஆகும் என திட்ட மதிப்பீடு செய்துள்ளோம்.முல்லை பெரியாறு குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதனால் ரோடு அமைக்க முடியவில்லை.


கமிஷனர், மேயர்: கூடுதல் பணியாளர்களை கொண்டு பணிகள் விரைவுபடுத்தப்படும். தெருவிளக்கு பிரச்னைக்கும் தீர்வு காணப்படும்.


மண்டலம் 2 (வடக்கு) தலைவர் சரவண புவனேஸ்வரி: கவுன்சிலராகி 5 மாதங்களாகியும் நிதி ஒதுக்கவில்லை. மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் பலன்இல்லை. அடிப்படை வசதிகேட்டு குரல் கொடுக்கும் மக்களுக்கு பதில் கூற முடியவில்லை. மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் முறைகேடாக உள் வாடகைக்குவிடுவதை தடுக்க வேண்டும்.


மண்டலம் 3 (மத்தி) தலைவர் பாண்டிச்செல்வி: வார்டுகளில் உள்ள கழிவுநீர் பம்பிங் மையங்களில் கமிஷனர், மேயர் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு ஒப்பந்த பணியாளர்கள் பலருக்கு வேலை செய்ய தெரியவில்லை.


மண்டலம் 4 (தெற்கு) தலைவர் முகேஷ் சர்மா: கழிவுநீர் உறிஞ்சும் சக்சன்லாரிகள் போதுமானதாகஇல்லை. 28 நாட்களாக லாரி வரவில்லை. நோட்டீஸ் வழங்காமல் வரி விதிக்க வீடுகளை அளக்கக்கூடாது.


மேயர், கமிஷனர்: புதிய லாரிகள் வாங்கப்படும்.சக்சன் லாரிகள் காலை 6:00 மணிக்கெல்லாம் வார்டுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மண்டலம் 5 (மேற்கு) தலைவர் சுவிதா: திருப்பரங்குன்றம் பகுதி மாயனங்களில் மின் விளக்கு உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன. அதை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேயர் விருந்தைபுறக்கணித்த கவுன்சிலர்கள்

மேயர் பொறுப்பேற்று இதுவரை விருந்து வைக்கவில்லையே என்ற குறை இருந்தது. இதையடுத்து அமைச்சர் தியாகராஜன் ஆலோசனையில் 'பளபள' அழைப்பிதழ் வினியோகித்து, அண்ணா நகர் மேயர் இல்லத்தில் மதிய விருந்து நடந்தது. அதற்காக கவுன்சில் கூட்டத்தை 12:00 மணிக்கே முடித்து விட்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள் கிளம்பினர். தாங்கள் ஒதுக்கப்படுவதாக கடுப்பில் உள்ள தி.மு.க., மா.செ.,க்கள் மூர்த்தி, தளபதி, பொன்முத்துராமலிங்கம் ஆதரவு கவுன்சிலர்கள் மேயர் விருந்தை புறக்கணித்தனர்.



வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    மதுரை பாராம்பரிய குடும்பத்தார் ஆங்கிலேயர் நாட்டைவிட்டு போகக்கூடாதென்று ஏன் அடம்பிடித்தார்கள் என இப்ப புரியுதுங்களா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement