Load Image
dinamalar telegram
Advertisement

நகராட்சி வணிக வளாகத்தில் விதிமீறல்: வாகனம் நிறுத்தினால் ரூ.2,000 அபராதம் அறிவிப்பு

மேட்டுப்பாளையம், : ''மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாக பகுதியில், வாகனங்களை நிறுத்தினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்'' என, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை செய்துள்ளது.


மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டு அருகே நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக மையம் உள்ளது. இந்த கட்டடத்தில், 42 நகராட்சி கடைகள் செயல்படுகிறது. இங்கு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு இடவசதி விடப்பட்டுள்ளது. ஆனால், சிலர் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூர் சென்று விடுகின்றனர். இதனால் அண்ணா வணிக வளாகம் டூ வீலர் ஸ்டாண்டாக மாறிவிடுகிறது. பொருட்களை வாங்க வருபவர்கள் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர். இது குறித்து, வியாபாரிகள், நகராட்சி நிர்வாகத்தில் புகார் கூறினர்.


ரூ. 2,000 அபராதம்


நகராட்சி கமிஷனர் வினோத், போக்குவரத்து சப்--இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் அண்ணா வணிக வளாகம் பகுதியை அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது, 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி விட்டு அதன் உரிமையாளர்கள் வெளியூர் சென்றது தெரியவந்தது.போலீசார் அனைத்து வாகனங்களையும் கயிற்றால் கட்டி தங்கள் பாதுகாப்பில் கொண்டு வந்தனர். வாகன உரிமையாளர்கள் வண்டியின் ஆர்.சி., லைசென்ஸ், காட்டிய பின்னரே வாகனங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டனர்.மேலும், கடை உரிமையாளர்கள் நீங்கலாக பிறர் அண்ணா வணிக வளாகத்தில், வாகனம் நிறுத்தினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement