Load Image
dinamalar telegram
Advertisement

ஆடை உற்பத்தி துறையில் சாதிக்க ஆசையா? நிப்ட்டீ கல்லூரியில் சேர அழைப்பு

உடுமலை : முதலிபாளையம் 'நிப்ட் -டீ' கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. ஆடை உற்பத்தி துறையில் தடம்பதித்து சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு.

பாரதியார் பல்கலை அங்கீகாரத்துடன், திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்- டீ கல்லுாரியில், அப்பேரல் பேஷன் சார்ந்த இளங்கலை பட்ட படிப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. பி.எஸ்.சி., அப்பேரல் பேஷன் டிசைனிங், அப்பேரல் மேனு பேக்சரிங் அண்டு மெர்ச்சன்டைசிங், அப்பேரல் புரொடக் ஷன் டெக்னாலஜி, காஸ்ட்யூம் டிசைன் அண்டு பேஷன்,பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட், கார்மென்ட் டிசைனிங் அண்டு புரொடக் ஷன். பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.காம்., பி.காம்., சி.ஏ., புரொபசனல் அக்கவுன்டிங், பி.பி.ஏ., ஐ.பி., இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்புகள் உள்ளன.

சிறந்த வல்லுனர்களை கொண்டு, அதிநவீன ஆடை உற்பத்தி மெஷின்களை பயன்படுத்தி செயல் விளக்கத்துடன் பாடம் நடத்தப்படுகிறது. படிப்பு முடித்த உடன், ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று தருகின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது துவங்கியுள்ளது. விபரங்களுக்கு, www.nifttea.ac.in என்கிற இணையதளத்தை பார்வையிடலாம். 80563 98111 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement