Load Image
dinamalar telegram
Advertisement

ஊரக திறனாய்வு தேர்வில் 5 பேர் தேர்ச்சி

மேட்டுப்பாளையம் : திறனாய்வு போட்டித் தேர்வில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த, 5 மாணவிகள், தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு, கல்விஉதவித்தொகை கிடைக்கும்.


காரமடை அருகே, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 950 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.இவர்கள் தினமும், 30 கிலோ மீட்டர் தொலைவில், வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இருந்து, பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, தமிழக ஊரகப் பகுதி திறனாய்வு போட்டித் தேர்வில் பங்கேற்க, தொடர்ந்து ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.


கடந்த, 2021--22ம் ஆண்டில் நடந்த இத்தேர்வில், இப்பள்ளியை சேர்ந்த, ஒன்பது மாணவர்கள் பங்கேற்றனர். இதில், இந்துஜா, வந்தனா, பிரதிக்சா, தேவிகா, கரிஷ்மா ஆகிய, 5 மாணவிகள் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு பெருமையை தேடித் தந்துள்ளனர்.இதில் தேவிகா என்ற மாணவி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு, 9 முதல் 12ம் வகுப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி கூறியதாவது:இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், தமிழக அரசு நடத்தும் திறனாய்வு போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியை ரேவதி, சிறப்பு பயிற்சி அளித்து வருகிறார்.


இந்த ஆண்டு நடந்த போட்டித் தேர்வில், 5 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பள்ளியைசேர்ந்த, 17 மாணவர்கள், போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.மாணவர்களுக்கு பாடத்துடன், போட்டித் தேர்வில் பங்கேற்பது குறித்து, பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு தலைமைஆசிரியர் கூறினார்.திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்ற, மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியை ரேவதியும் மற்றும் ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement