மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
உடுமலை : உடுமலை அரசுப்பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த பின், உயர் கல்வி படிப்பது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, எந்தெந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி வருகின்றனர்.அவ்வகையில், பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவியருக்கு உரிய ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:அரசுப்பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வி படிப்பது தொடர்பாக புரிதல் இல்லாமல் உள்ளனர். இதனால், பலர் தங்களின் உயர்கல்வி படிப்பை தேர்வு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.இதை தவிர்க்கும் வகையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர், தாமாக முன்வந்து, மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து ஆலோசனை அளிக்கின்றனர். அதன் அடிப்படையில், இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!