யோகா கொண்டாட்டம்
உடுமலை : சர்வதேச யோகா தினத்தையொட்டி, உடுமலையில், பள்ளிகள், கல்லுாரிகள் என, பல்வேறு இடங்களில், பலரும் யோகாசனம் பயிற்சியில் ஈடுபட்டனர்.அவ்வகையில், அமேசான் பப்ளிக் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. உலக சமாதான அறக்கட்டளை பயிற்சி ஆசிரியர் சத்தியா தலைமை வகித்தார். இதையடுத்து, மாணவர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு ஆசனங்களை செய்தனர். தொடர்ந்து, தினமும் யோகா செய்வதால் மனதளவில் முழுமையான ஆரோக்கியம் மற்றும் விழிப்புடன் இருக்க முடியும் என, மாணவர்களிடம் விளக்கிக் கூறப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!