புள்ளிமானை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு அபராதம்
பெ.நா.பாளையம் : கோவை வனச்சரகம், மூங்கில் பள்ளம் செல்லும் சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே காப்பு காட்டுக்கு வெளியே ஒருவர் புள்ளி மான் கறியை வீட்டில் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்று, வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.இதில், காப்பு காட்டுக்கு வெளியே உள்ள ஓடையில் நாயால் கடித்து புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. அதை, அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி வெட்டி கூறு போட்டு தனது வீட்டின் அருகில் உள்ள பாபு, 40, சுப்பிரமணி, 45, ராமு, 30, சிவதாஸ், 37, கந்தசாமி, 81, ஆகியோருக்கு புள்ளிமான் இறைச்சியை கொடுத்தது தெரியவந்தது. சம்பவ இடத்தில் புள்ளிமானின் கொம்புடன் கூடிய தலை, தோல் ஆகியவற்றை வனத்துறையினர் கைப்பற்றினர்.
கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வன உயிரின குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு, புள்ளிமானை வெட்டி கூறு போட்டு, சமைத்த குற்றத்துக்காக ஆறு பேருக்கும் தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!