Load Image
dinamalar telegram
Advertisement

அறிவிக்கப்படாத மின்வெட்டால் அதிருப்தி; மக்கள், தொழில்துறையினர் கண்ணீர்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், முன்னறிவிப்பின்றி தினமும், எட்டு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி - கோவை பிரதான சாலையில், கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் நுாற்றுக்கணக்கான சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் உள்ளன. அதேபோன்று, குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.கிணத்துக்கடவு பேரூராட்சியாக இருந்தாலும், வேகமாக வளர்ந்து வரும் நகரமாக இருப்பதால், நகராட்சியாக தரம் உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில்துறையை நசுக்கும் வகையில், சமீப காலமாக மின்வெட்டு அதிகரித்து வருகிறது. இதனால், தொழில்துறையினரும், பொதுமக்களும் அதிருப்தியடைந்துள்ளனர்

பொதுமக்கள் கூறியதாவது:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, பகல் நேரத்தில் திடீரென நான்கு மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. அதேபோன்று, இரவில், மூன்று முறை மின்வெட்டு ஏற்பட்டு, நான்கு மணி நேரத்துக்கு மின்வினியோகம் இருப்பதில்லை.

இதுபற்றி, மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தாலும், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.குறிப்பாக, தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஓராண்டு காலத்தில் இந்த பிரச்னை அதிகரித்துள்ளது. தொழில்துறையை பாதுகாக்கவும், மக்களுக்கு ஏற்படும் பிரச்னையை கருத்தில் கொண்டு, தடையில்லா மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


வால்பாறை

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு தேவையான மின்சாரம், அய்யர்பாடி துணை மின் நிலையத்திலிருந்து வினியோகிக்கப்படுகிறது, இந்நிலையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாள் மின் தடையும் செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில், மழை காலங்களில் அறிவிக்கப்படாமல் மின் வெட்டு ஏற்படுவதை, மின்வாரிய அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement