Load Image
dinamalar telegram
Advertisement

தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து குழந்தை பலி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பக்கெட்டில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை இறந்தது.


பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஆனந்த் கார்டன் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் முருகேசன்,39. 'சி.சி.டி.வி.,' கேமரா பொருத்தும் பணி செய்து வருகிறார். மனைவி வளர்மதி. இவர்களுக்கு நிவன் பாதக்கரை,1, ஆண் குழந்தை இருந்தது.நேற்று முன்தினம் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பாதியளவு தண்ணீர் இருந்த அலுமினிய பக்கெட்டில் தவறி விழுந்த நிலையில் கிடந்தது.


அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு ஜோதிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். ஒரு வயது குழந்தையின் இத்தகைய முடிவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement