Load Image
dinamalar telegram
Advertisement

மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு; திட்டத்தில் பயன்பெற அழைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள், தென்னை வளர்ச்சி வாரியத்தின் காப்பீட்டு திட்டத்தில் இணைய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிக்கை:'கேரா சுரக்ஷா' எனும் காப்பீட்டு திட்டம், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், தென்னை மற்றும் பனை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு, விபத்து காலத்தில் அதிகபட்சமாக, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.ஆண்டுக்கு, 99 ரூபாய் பிரீமியமாக செலுத்தி, 18 முதல் 65 வயதுள்ள, தென்னை மற்றும் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் திட்டத்தில் இணையலாம்.

அந்தந்த வேளாண் அலுவலகம், தென்னை வளர்ச்சி வாரியத்தின், https://coconutboard.gov.in/ என்ற இணையதளம், வாரியத்தின் அலுவலகங்கள், சேவை மையங்களில் காப்பீட்டு திட்டத்துக்கு பதிவு செய்யலாம்.விபத்து ஏற்பட்டு ஒரு பகுதி செயலிழந்தாலோ, காயம் ஏற்பட்டாலோ மருத்துவ சிகிச்சைக்கு, ஒன்று முதல், 2.5 லட்சம் ரூபாய் வரையில் வழங்கப்படும். விபத்தால் காயம் ஏற்பட்டு பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், ஆறு வாரங்களுக்கு மொத்தம், 18 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.மருத்துவமனையில் அவர்களை கவனித்துக்கொள்வோருக்கு தினமும், 200 ரூபாய் என, 18 நாட்களுக்கு வழங்கப்படும். விபத்தால் காயம் மற்றும் மரணம் ஏற்பட்டால், 24 மணி நேரத்துக்குள் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொழிலாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement