பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், கடை வியாபாரிகள் செய்திருந்த ஆக்கிரமிப்புகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சி சொந்தமான கடைகள் உள்ளன.
கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடைகள் முன் உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, விரிவாக்கம் செய்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இது குறித்து பொது மக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து நகராட்சி கமிஷனர் வினோத், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை நேரில் ஆய்வு செய்தார். பின் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் கடைகள் முன் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!