பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
பெ.நா.பாளையம் : துடியலுார் அருகே பூட்டை உடைத்து, 12 பவுன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துடியலுார் அருகே உள்ள என்.ஜி.ஜி.ஓ., காலனி, வி.கே.வி., நகரில் வசிப்பவர் பிரகாஷ்,38; தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர், துடியலுாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு குடும்பத்துடன் பொருட்கள் வாங்க சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 12 பவுன் நகை காணாமல் போயிருந்தது. திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி., பதிவுகள் இருப்பதால், திருடர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் துடியலுார் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
வீட்டின் கதவு உடைப்பு
அன்னுார் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 12 சவரன் நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரியாக்கவுண்டனுாரைச் சேர்ந்த ராமசாமி மனைவி ரத்தினம், 60. இவர் கடந்த வாரம் திருச்சிக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.வீட்டில் வைத்திருந்த நெக்லஸ், செயின் காதணிகள், வளையல்கள் என, 12 சவரன் நகைகளை காணவில்லை, திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!