பொதுத்தேர்வில் சாதனைமாணவிகளுக்கு பாராட்டு
வால்பாறை : வால்பாறையில், 10, பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
வால்பாறையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சின்கோனா, காடம்பாறை, வாட்டர்பால்ஸ் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகளும்; பிளஸ் 2 பொதுத்தேர்வில், அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் துாய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள், ரினோபியா, சிவரஞ்சனி, சுஷ்மிதா ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோனிகா பரிசு வழங்கி பாராட்டினார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!