Load Image
dinamalar telegram
Advertisement

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சரமாரி புகார்

அன்னுார் : அன்னுார் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் (பொறுப்பு) சரஸ்வதி, துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில், பொது சுகாதார பயன்பாட்டுக்காக கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் உறிஞ்சும் மோட்டார் புதிதாக வாங்கி டிராக்டர் டேங்கில் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட, 43 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இதில், வரவு, செலவு கணக்கு சமர்பிக்கவில்லை என்றும், புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் ஏலத்தில் குழப்பங்கள் இருப்பதாகவும், துப்புரவு பணிக்கு ஆட்கள் வருவதில்லை, பகலிலும் பல இடங்களில் தெருவிளக்குகள் எரிகிறது உட்பட பல்வேறு புகார்களை கவுன்சிலர்கள் சரமாரியாக முன்வைத்து பேசினர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement