Load Image
dinamalar telegram
Advertisement

சீரான குடிநீர் வினியோகத்திற்கு என்ன செய்யலாம்! அதிகாரிகள் குழு அன்னூரில் ஆய்வு

அன்னுார் : குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த, நிர்வாக பொறியாளர் அன்னுாரில் ஆய்வு மேற்கொண்டார். புதிய இணைப்பு தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பேரூராட்சியில், 5,500 குடிநீர் இணைப்புகள் உள்ளன. அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் கூட்டு குடிநீர் திட்டம், 240 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு செயல்பட துவங்கியது.இப்புதிய திட்டத்தில், அன்னுார் பேரூராட்சியில் பெரும்பாலான பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை ஆகிறது. சில பகுதிகளுக்கு குடிநீர் மிக குறைவாக சப்ளை ஆகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.


இதுகுறித்து பேரூராட்சி சார்பில், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லட்சுமணன், உதவி நிர்வாக பொறியாளர் வெங்கடேசா ஆகியோர் அன்னுார் அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள, 1லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியை ஆய்வு செய்தனர். பின்னர் அக்கரைசெங்கப்பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீரேற்று நிலையத்தில் ஆய்வு செய்தனர்.


ஆய்வின்போது, பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், கவுன்சிலர்கள் காஞ்சனா சிவகுமார், ராசாத்தி சின்னச்சாமி, குணசுந்தரி ரஞ்சித்குமார் ஆகியோர் அதிகாரிகளிடம் குடிநீர்வினியோகம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து விளக்கினர். ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறுகையில், 'தினசரி 21 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பேரூராட்சிக்கு சப்ளை செய்யப்படுகிறது. எனவே, குடிநீர் பற்றாக்குறை என்பதே இல்லை. சப்ளை குறைவாக உள்ள பகுதியில் வால்வு அமைத்தல் அல்லது குழாய் விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றனர்.


பேரூராட்சி தலைவர்பரமேஸ்வரன் கூறுகையில், "அன்னுார் பேரூராட்சியில் புதிதாக குடிநீர் குழாய் இணைப்பு தேவைப்படும் வீடு, கடை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், அன்னுார் பேரூராட்சியில் விண்ணப்பித்து உரிய வைப்பு தொகையை செலுத்தலாம்"என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement