கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஆனைமலை : ஆனைமலை, நா.மூ.சுங்கத்திலுள்ள ராமு கலை அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் முனைவர் காளிராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர் நித்தியானந்தம் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் ஒன்னமாரணன், முதல்வர் பிரேமலதா ஆகியோர் பட்டமளிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், 537 பேர் பட்டம் பெற்றனர்.துணைவேந்தர் பேசுகையில், ''கோவை பாரதியார் பல்லையில், பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு, திறமையான பேராசிரியர்கள் வாயிலாக கற்பிக்கப்படுகிறது.
பி.எச்டி., உள்ளிட்ட உயர்கல்விக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இளங்கலை, முதுகலையில் படிக்கும் பாடங்களில், பிடித்த பிரிவை தேர்வு செய்து, பி.எச்டி., படிக்க வேண்டும்,'' என்றார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!