Load Image
dinamalar telegram
Advertisement

உற்சாகத்தில் பள்ளி மாணவர்கள்! பயிற்சிகள் இனிதாக நிறைவு

பெ.நா.பாளையம் : தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க இணைப்பு பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளநிலையில், கொரோனா கால இறுக்கமான சூழல்கள் மாறி, வகுப்பறை சூழல்களை எதிர்கொள்ள மாணவர்கள் உற்சாகத்துடன் ஆயத்தமாகியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


கோடைக்கால விடுமுறைக்கு பின்பு கடந்த, 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களின் இறுக்கமான மனநிலையைமாற்றும் வகையில், முதல் ஒரு வார காலம் புத்தகங்கள் இல்லாமல் கதைகள், ஆடல், பாடல், விளையாட்டுக்கள் வாயிலாக புத்துணர்வு இணைப்பு பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுஇருந்தது.கடந்த ஒரு வார காலம் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்தனர். தொடர்ந்து, கதைகள், ஆடல், பாடல் பயிற்சிகள் காரணமாக, மாணவர்கள் ஆசிரியர்களை புரிந்துகொள்ளவும், ஆசிரியர்கள் மாணவர்களின் தனித்திறன்களை அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.


இந்நிலையில், பாடத்திட்டங்களின் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகள் துவங்கியுள்ளன. மாணவர்களின் அடிப்படை வாசிப்பு, எழுத்து திறனை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.


முதல் முறை பயிற்சி புத்தகம்



மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் நடப்பாண்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், முதல் வகுப்புக்கு அரும்பு, இரண்டாம் வகுப்புக்கு மொட்டு, மூன்றாம் வகுப்புக்கு மலர் என்ற பயிற்சி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கியுள்ளனர். இப்பயிற்சி புத்தகங்கள் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்வது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் முன்பே வழங்கப்பட்டுள்ளன. கோவையில் இப்புத்தகங்கள், மாவட்ட அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர் கருப்புசாமி கூறுகையில், ''கொரோனா கால இடைவெளிக்கு பின்பள்ளிக்கு வருவதைபல மாணவர்கள் விரும்பவில்லை. அவர்களை பள்ளிக்கு வரவைப்பதே பெரும் சிக்கலாக இருந்தது.


தற்போது, புத்தாக்க இணைப்பு பயிற்சி வாயிலாக மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் ஓர் இணக்கமான சூழல் இப்பயிற்சியால் ஏற்பட்டுள்ளது. சில மாணவர்களிடம் இருந்த தனித்திறன்களை நாங்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.தற்போது, பாடத்திட்ட அடிப்படையில் புத்தகங்களை பயன்படுத்தி வகுப்புகள் துவங்கியுள்ளன,'' என்றார்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement