அறிவியல், கணித செயல்பாடுகள் பயிற்சி: இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான அறிவியல், கணித செயல்பாடுகள் பயிற்சி முகாம் நடந்தது.
சென்னை கணித அறிவியல் நிறுவனம், பள்ளி கல்வித்துறை, இல்லம் தேடி கல்வி திட்டம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான அறிவியல், கணித செயல்பாடுகள் பயிற்சி முகாம் நடந்தது.பொள்ளாச்சி வட்டார வள மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க கோவை மாவட்ட செயலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
பயிற்சியின் நோக்கம் குறித்து இல்லம் தேடி கல்வி கோவை மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் லெனின் பாரதி பேசினார்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, பொள்ளாச்சி தெற்கு மேற்பார்வையாளர் காயத்ரி, ஆசிரியர்கள் கீதா, சபரிராஜா, சுனில்லால் ஆகியோர் இத்திட்டம் குறித்து பேசினர்.'எளிய அறிவியல் பரிசோதனைகள்' என்ற தலைப்பில் கருத்தாளர்கள் தியாகராஜன், 'கணக்கும் இனிக்கும்' என்ற தலைப்பில் ராஜூம் பேசினர்.
'வானியல் அதிசயங்கள்' மற்றும், 'அறிவியல் விளையாட்டுகள்' என்ற தலைப்பில் சசிகுமார் பேசினார்.கணிதம் மற்றும் அறிவியலில் செயல்பாடுகளுடன் கூடிய பயிற்சி, இல்லம் தேடி திட்ட தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது. செயல்முறை விளக்கம் அளித்ததுடன், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
அறிவியல் இயக்க மாநில செயலாளர் முகமது பாதுஷா, தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பொள்ளாச்சி பகுதி அறிவியல் இயக்க நிர்வாகி கோகுல் பிரசாத் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், தன்னார்வலர்கள் 80 பேர் பங்கேற்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!