Load Image
dinamalar telegram
Advertisement

காடுகளுக்கு வெளியே மரம் வளர்ப்பு திட்டம்: ரூ.2.50 கோடி ஒதுக்கீடு

மேட்டுப்பாளையம் : "சர்வதேச வளர்ச்சிக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜன்சி மற்றும் இந்திய சுற்றுச்சூழல் வனம் அமைச்சகத்துடன் இணைந்து, காடுகளுக்கு வெளியே மரங்களை வளர்க்க, ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது," என வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.


தமிழ்நாடு வேளாண் பல்கலை, சர்வதேச வனஆராய்ச்சி மையம், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜன்சி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் இணைந்து, 'நிலையான காடுகள் மற்றும் காலநிலை தழுவல்' திட்டத்தின் கீழ், காடுகளுக்கு வெளியே, மரங்களை வளர்த்தல் குறித்து, இருதரப்பு ஒப்பந்தம், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது:


தேசிய வன கொள்கை, 33 சதவீதம் காடுகள் இலக்கை அடையவும், காடுகள் வளர்ப்பில், இந்தியாவின் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பை ஆதரிக்கவும், காடுகளுக்கு வெளியே மரங்களை வளர்த்தல்திட்டம் உதவுகிறது. இத்திட்டத்தில் வனக்கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்துடன் ஆறு கூட்டமைப்புகள் பங்களிப்பாக உள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், ஹரியானா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தில், திட்டத்தை செயல்படுத்த, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு துணை வேந்தர் பேசினார்.வேளாண் பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், இயக்குனர் சோமசுந்தரம், வனக்கல்லுாரி முதல்வர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement