நகராட்சி ஊழியர்களுக்கு வீடு ஒதுக்குங்க!
வால்பாறை : வால்பாறை நகராட்சியில் பணி புரியும் ஊழியர்களுக்கு வீடுகள் இருந்தும், சம்பந்தமில்லாதவர்கள் குடியிருப்பதால் வீடு கிடைக்காமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
வால்பாறை நகராட்சியில், பொறியாளர், மேலாளர், ஒப்பந்தப்பணி மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர், அலுவலக பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.பெரும்பாலான ஊழியர்கள், வேறு மாவட்டத்தில் இருந்து வந்து பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நகராட்சி குடியிருப்பில் வீடு ஒதுக்கப்படவில்லை. இதனால், வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.
இதுகுறித்து அலுவலக பணியாளர்கள் கூறுகையில், 'நகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், தற்காலிகமாக பணிபுரிந்து வெளியே சென்றவர்கள், பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள் உட்பட மொத்தம், 10 பேர் தங்கியுள்னர்.ஆனால், தற்போது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒதுக்க வீடுகள் இல்லை. அலுவலகத்தில் பணிபுரியாமல் வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக காலி செய்து, தற்போது பணியில் உள்ள நகராட்சி ஊழியர்களுக்கு வீடு வழங்க வேண்டும்,' என்றனர்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!