Load Image
dinamalar telegram
Advertisement

பஸ் ஸ்டாண்ட் குடிநீர் குழாயில் காத்துதாங்க வருது!

அத்துமீறும் வாகனங்கள்


பொள்ளாச்சி முருகாலயா தியேட்டர் அருகே, ஒரு வழிப்பாதையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அத்துமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணன், பொள்ளாச்சி.



போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பொள்ளாச்சி சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு முன், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோட்டில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.- திருமுருகன், பொள்ளாச்சி.



ரோட்டை சீரமைக்கணும்!
ஆனைமலை, காளியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, ரோடு சிதிலமடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.- மாரிமுத்து, காளியாபுரம்.



குடிநீருக்கு திண்டாட்டம்
பொள்ளாச்சி, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகங்களில், குடிநீர் குழாய் உடைந்து பல ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குடிநீருக்காக அலைமோதுவதை தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராம், பொள்ளாச்சி.



சிக்னலை இயக்க வேண்டும்
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரோடு, பல்லடம் ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து ரோடுகள் சந்திப்பு பகுதியில் சிக்னலும் சீராக இயங்குவதில்லை, போலீசாரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை. இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.- முருகேஷ், பொள்ளாச்சி.



கழிப்பிடத்தை பராமரிக்கணும்!
ஆனைமலை, நரிக்கல்பதி கிராமத்தில் கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கழிப்பிடத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.- வெங்கடேஸ், ஆனைமலை.



போக்குவரத்துக்கு இடையூறு
வால்பாறை நகரில், பல இடங்களில் கடைகளுக்கு முன் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- ராஜா, வால்பாறை.



'சிக்னல்' அமைக்க வேண்டும்
ஆனைமலை முக்கோணம் பகுதியில், 'சிக்னல்' அமைக்காமல் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆனைமலையில் போக்குவரத்து சிக்னல் அமைத்து, வாகன இயக்கத்தை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராஜ், ஆனைமலை.



தீர்வு வேண்டும்
வால்பாறை நகரில் அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு, போலீசார் நிரந்தர தீர்வு காண வேண்டும். அத்துமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து, கட்டுப்படுத்த வேண்டும்.- விமல்,

வால்பாறை.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement