லட்சுமி நரசிம்மர் கோவிலில் மண்டல பூஜை
மேட்டுப்பாளையம் : சிறுமுகை அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில், மண்டல பூஜைநடைபெற்றது.
சிறுமுகை - சத்தியமங்கலம் மெயின் ரோட்டில், சின்னகள்ளிபட்டி ரங்கம்பாளையம் அருகே, செல்வகணேசபுரத்தில் புதிதாக,லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 4 ம் தேதி நடைபெற்றது. 48 நாட்கள் மண்டல பூஜைசெய்யப்பட்டு வந்தன.மண்டல பூஜை நிறைவு விழாவை அடுத்து, காலையில், 6:00 மணிக்கு நடை திறந்து, சுவாமிக்கு திருமஞ்சனம் அலங்காரம் பூஜை செய்தனர். பின்பு சுதர்சன ஹோமம் வேள்வி செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!