போலீஸ் செய்திகள்
கஞ்சா கடத்திய இருவர் கைது
மதுரை: ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த நிஜாமுதீன் - மதுரை விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 62 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்த செல்லுார் ஜெயபாண்டி 31, ஆந்திரா வாழி 22, ஆகியோரை கைது செய்தனர். கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.டிரைவரிடம் பணம் பறிப்பு அவனியாபுரம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்பூர் பகுதியை சேர்ந்த குருநாதன் 49, டேங்கர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு மதுரை விமான நிலையம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரிக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்க இறங்கினார். அதேநேரம் டூவீலரில் வந்த 4 பேர், குருநாதன் கையில் இருந்த ரூ. 4,650 ஐ பறித்துச் சென்றனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.--போலீஸ் டூவீலருக்கு தீவைப்புதிருப்பரங்குன்றம்: ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 29, மதுரை நகர் போலீஸ்காரர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார். இரவில் வீட்டின் முன்பு திடீர் வெளிச்சம் தெரியவே, ராஜ்குமார் ஜன்னலை திறந்து பார்த்தபோது டூவீலர் எரிந்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.--பெண் தற்கொலைதிருமங்கலம்: பி.டி. ராஜன் தெரு பால்பாண்டி மனைவி அம்சவள்ளி 26. திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. 2 வயதில் மகன் உள்ளார். பால்பாண்டி கோவை தனியார் நிறுவன ஊழியராக உள்ளார். நேற்று முன்தினம் மதுரையில் நடந்த உறவினர் இல்ல விழாவில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கோபித்துக்கொண்டு திருமங்கலம் வீட்டிற்கு வந்த அம்சள்ளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., அபிநயா விசாரிக்கிறார்.-----22 கிலோ குட்கா பறிமுதல் திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு டூவீலர்களில் வந்த டி.பாறைகுளம் ஈஸ்வரன் 36, வில்லூர் முருகனிடம் 39, இருந்து 22 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.கொலை வழக்கில் இருவர் கைதுஅலங்காநல்லுார்: மேலுார் கொட்டக்குடி, ஆண்டிபட்டி பகுதி ராமமூர்த்தி 39, மனைவி குழந்தைகளை பிரிந்தவர். அலங்காநல்லுாரை அடுத்த அழகாபுரி காலனியில் கணவரை இழந்து 2 மகள்களுடன் வசித்த முத்துச்செல்வியுடன் 37, பழகினார். நேற்று முன்தினம் கொக்கு பிடிக்க வந்த அழகாபுரி வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது. அன்றிரவு ராமமூர்த்தியை கட்டையால் அடித்துக் கொலை செய்த அன்பில் பொய்யாமொழி 22, பட்டதாரி. கல்லுாரி மாணவர் சிந்தனைச்செழியனை 20, போலீசார் கைது செய்தனர்.வியாபாரி கொலை வாடிப்பட்டி: நீரேத்தான் ஊராட்சி ஒன்றிய அலுவலக காலனி பழ வியாபாரி முருகன் 47. நேற்றிரவு 9:30 மணிக்கு கால்நடை மருந்தகம் பின்புறம் ஒட்டான்குளம் நடைபாதையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பழ வியாபாரி கொலைவாடிப்பட்டி: நீரேத்தான் யூனியன் ஆபீஸ் காலனி முருகன் 47. கொய்யா பழ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே டூவீலரில் வந்த போது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்தை எஸ்.பி., சிவபிரசாத் பார்வையிட்டார். டி.எஸ்.பி., பாலசுந்தரம் தலைமையில் 3 தனிப்படை அமைத்து கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!