Load Image
dinamalar telegram
Advertisement

என்விரோ ஏஞ்சல் மதுரை பிரியதர்ஷினி



மதுரை -வார்த்தைக்கும் செயலுக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்து காட்டுவதே சுற்றுச்சூழலுக்கு அழகு. அன்றாட வாழ்வியல் வழியாக அதை செயல்படுத்திய மதுரை பரவையைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கு நேஷனல் பயோடைவர்சிட்டி அதாரிட்டியின்' தேசிய அளவிலான முதல்பரிசு கிடைத்துள்ளது.சென்னையில் உள்ள நேஷனல் பயோடைவர்சிட்டி அதாரிட்டி மற்றும் இந்தியாவின் யு.என்.டி.வி. அமைப்பு சார்பில் பயோடைவர்சிட்டி தினத்திற்கான போட்டி மே மாதம் நடந்தது. சுற்றுச்சூழல் சார்ந்த ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் உருவாக்குதல், அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்காக கடைபிடிக்கும் 5 விஷயங்கள் குறித்து எழுதுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் 'அன்றாட சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்காக' தேசிய அளவில் முதல்பரிசு கிடைத்தது என்கிறார் பிரியதர்ஷினி. அவர் கூறியதாவது:பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். சுற்றுச்சூழலில் அக்கறை இருப்பதால் முடிந்தவரை பாலிதீனை தவிர்த்து விடுவேன். பிளாஸ்டிக் பாட்டில்களை துாக்கி எறியாமல் அவற்றில் செடிகள் வளர்க்கிறேன். மண் பாத்திரங்களில் சமைப்பதால் 90 சதவீத சத்துகள் வீணாகாமல் தவிர்க்கிறேன். அரிசி மற்றும் இட்லி மாவு பாத்திரம் கழுவிய தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுகிறேன். காய்கறி கழிவுகளை உரமாக்கி செடிகளுக்கு பயன்படுத்துகிறேன். உடல் ஆரோக்கியத்திற்காக வீட்டிலேயே ரசாயனம் கலக்காத சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய், லிப் பார்ம் தயாரித்து பயன்படுத்துகிறேன். அதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறேன். எனது அன்றாட பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாததால் விண்ணப்பித்தேன். இதையடுத்து முதல்பரிசுக்கு தேர்ந்தெடுத்து சான்றிதழ் வழங்கினர், என்றார்.இவரை இன்ஸ்டாகிராமில் பாராட்ட: _kondrai_
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement