Load Image
dinamalar telegram
Advertisement

வாகனங்களின் வேகத்தைக் கண்காணிக்கும் கேமராக்கள்;நான்கு வழிச்சாலையில் சோதனை முயற்சி

திருமங்கலம்--திருமங்கலம் - திண்டுக்கல் நான்கு வழி சாலைகளில் பறக்கும் வாகனங்களின் வேகத்தைக் கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் கப்பலூர் காலனி பஸ்ஸ்டாப் அருகே மதுரையில் இருந்து வரும் வாகனங்களையும்,, தோப்பூர் பாலத்தில் திண்டுக்கல் செல்லும் வாகனங்களின் வேகத்தையும் கண்காணிக்க சாலை நடுவே தூண்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சோதனை முயற்சியாக நேற்று திருமங்கலம் கப்பலூர் காலனி பஸ் ஸ்டாப் அருகில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் இயக்கப்பட்டன.



இந்த ரோட்டில் வந்த வாகனங்களை 100 மீட்டர் தூரத்திலேயே கேமராக்கள் ஸ்கேன் செய்து டிஸ்பிளே போர்டில் வேகத்தை காண்பித்தன. மணிக்கு 80 கி.மீ., வரை வேகத்தை பச்சை நிறத்திலும், அதற்கு மேல் விரையும் வாகன வேகத்தை சிவப்பு நிறத்திலும் காண்பித்தன.டோல்கேட் நிர்வாக அதிகாரிகள் கூறும்போது, ''வேகத்தை கணக்கிடும் கருவிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நேற்று சோதனை முயற்சியாக கேமராக்கள் இயக்கப்பட்டன. இது விரைவு வாகனங்களை எச்சரிக்கவா அல்லது அபராதம் விதிக்கவா என்பதை அரசு அறிவிக்கும்'' என்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement