Load Image
dinamalar telegram
Advertisement

வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உட்பட ஐவர் மீது வழக்கு



தேனி,-மனைவியிடம் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம் கேட்டு குடும்பத்துடன் கொலை மிரட்டல் விடுத்த கணவர்,மாமனார், மாமியார் உட்பட ஐந்து பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.பெரியகுளம் ஜெயமங்கலம் வ.உ.சி., தெரு செங்கொடிகோகிலா 29. இவருக்கும் கம்பம் பிரசாத்துக்கும் 35, 2019 ஜூன் 14ல் திருமணம் நடந்தது. 25 பவுன் நகைகள், சீர்வரிசை பொருட்கள் பெண் வீட்டார் வழங்கினர். திருமணம் முடிந்து 5 நாட்கள் சென்னையில் வசித்தனர்.ஒட்டல் மேலாளர் எனக்கூறிய கணவர், நட்சத்திர ஒட்டலில் பாரில் மேலாளராக இருந்தது தெரியவந்தது.அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினார். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து மனைவியுடன் தகராறு செய்தார். மாமனார் மணிமந்திரி, மாமியார் ரத்தினமாலா, கணவரின் சகோதரி நிவேதா, அவரின் கணவர் செந்தில்ராம்குமார் ஆகியோர் கணவருடன் சேர்ந்து வாழ கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் கணவர், மாமனார், மாமியார், உட்பட 5 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement