Load Image
dinamalar telegram
Advertisement

காட்சிப்பொருளானகண்காணிப்பு கேமராக்கள்

போடி, -போடி நகர் பகுதியில் திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றச் செயல்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறிய பல லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்படன. போடி பஸ்ஸ்டாண்ட், தேவர்சிலை, கட்டபொம்மன் சிலை, பரமசிவன் கோவில் ரோடு, ஸ்டேட் பாங்க் ரோடு, கருப்பசாமி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 18 கேமராக்கள் பொருத்தப்பட்டன. 7 ஆண்டுகளுக்கு முன் போடி காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் பகலில் கொள்ளையர்கள் நகையை பறித்த சம்பவம் கண்காணிப்பு கேமரா மூலம் தெரிந்து குற்றவாளியை போலீசார் கைது செய்ய உதவியாக இருந்தது. அதன் பின் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்த அதிகாரிகள் முன்வராததால் போடி பகுதியில் சமூகவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். குற்ற செயலில் ஈடுபடுவோரை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement