இடைத்தேர்தலில் இருவர் மனு தாக்கல்
தேனி,-தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள 9 உள்ளாட்சி பதவிகளுக்கு 4 நாட்களில் இருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர், வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர், 7 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 9 பதவிகளுக்கா இடைத்தேர்தல் ஜூலை 9ல் நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் ஜூன் 20ல் துவங்கியது. இந்த நான்கு நாட்களில் டி.வாடிப்பட்டி வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் இருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மற்ற பதவிகளுக்கு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஜூன் 27 மனுதாக்கல் செய்ய இறுதி நாளாகும்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!