உரிமை கோரப்படாத வாகனங்கள் அரசுடமை
தேனி -தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகளில் பறிமுதல் செய்த டூவீலர், வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் தேனி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். வாகன விபரங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், தாலுகா அலுவலத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இதிலும் உரிமைகோரப்படாத வாகனங்கள் அரசுடமையாக்கப்படும் என தேனி தாசில்தார் சரவணபாபு தெரிவித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!