Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்...



மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்குதேனி: பூதிபுரம் ஆதிபட்டி சாத்தாகோயில் தெரு கல்பனாதேவி 29. அதேப்பகுதியை சேர்ந்த வசந்தகுமாருடன் 35, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. தற்போது கல்பனாதேவி தனது பெற்றோர் வீட்டில் உள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் சைக்களில் பூதிப்புரம் ரோடு கல்லறைத் தோட்டம் அருகே சென்றபோது கணவர், தகராறு செய்தார். பழனிசெட்டிபட்டி போலீசார், கணவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தில் வழக்குபபதிவு செய்து விசாரிக்கிறார்.பெண்ணுக்கு கொலை மிரட்டல்ஏழு பேர் மீது வழக்குதேனி: போடி பங்கஜம் 2வது தெரு அன்னபாக்கியம் 32. இவரது கணவர் சிவகுமார் 36. கணவர், மனைவியை சந்தேகப்பட்டு தாக்கி துன்புறுத்தினார். மாமியார் முனியம்மாள் 55, கணவரின் சகோதரர் ராஜாமணி 39, அவரது மனைவி அனிதா 29, உறவினர்கள் திலீப்குமார் 22, மீனா 48, அம்சு 55, உட்பட இணைந்து வீட்டில் இருந்தால் கொலை செய்வதாக மிரட்டினர். பின், கணவர் வீட்டின் அருகே தகராறு செய்துள்ளனர். அன்னபாக்கியம் போடி மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவில் போடி அனைத்து மகளிர் போலீசார் கணவர், மாமியார் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement