டாஸ்மாக் கடை அகற்றவலியுறுத்தி முற்றுகை
தேனி, -அல்லிநகரத்தில் மக்கள் கூடும் இடத்தில் உள்ள 'டாஸ்மாக்' கடையை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., வி.சி.க., சார்பில் கட்சியினர் முற்றுகையிட்டனர்.தேனி - பெரியகுளம் ரோட்டில் அல்லிநகரம் கூட்டுறவு சங்கம், இரண்டு ரேஷன் கடைகள், மண்ணெண்ணெய் பங்க் உள்ளது. இங்கு நாள்தோறும் அதிகளவில் பெண்கள், முதியவர்கள் வந்து செல்கின்றனர். ஜூன் 15ல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதே இடத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் டாஸ்மாக் கடை திறந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. தற்போது மீண்டும் திறந்ததால் மக்கள் பாதிக்கப்படுவர் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. தாலுகாக்குழு உறுப்பினர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், வெண்மணி, தாலுகா செயலாளர் தர்மர், வி.சி.க., நாகரத்தினம், நகரச் செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றனர். தேனி டி.எஸ்.பி., பால்சுந்தர் பேச்சு வார்த்தை நடத்தி அகற்ற உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!